முதலமைச்சரின் ஊடகப்பிரிவு-
மட்டக்களப்பு மாவட்ட ஏராவூர் நகரம் மற்றும் ஏராவூர் பற்று ஆகிய பிரதேசங்களில் ஏற் பட்டிருக்கும் அபிவிருத்தித் தேவைகள், முடிக்கப்படாமல் கிடக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆகியவற்றை கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் கோரிக்கையுடன் இன்று சம்மந்தப்பட்ட நிருவாக குழுவினர் அங்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.
நேற்று காலை 10 மணியில் இருந்து இடம் பெற்ற இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரை சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், விவசாயத் திணைக்களம், நீர் பாசணத் திணைக்களம், நகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகம், போக்கு வரத்து அதிகார சபை, உள்ளூராட்சி திணைக்களம், மாவட்ட அரசாங்க செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரன் பிரசன்னா, அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி, ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)