தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று ஜக்கிய அமேரிக்காவின் ஆசிய மற்றும் தெற்காசிய மத்திய பிரந்தியத்தின் விவகார இராஜங்க செயலாளர் நிசா விஸ்வளைச் சந்தித்தனர்.
2009ஆம் ஆண்டில் இலங்கை நடைபெற்ற யுத்ததின்போது விடுதலைப்புலிகள்- இரானுவத்தினர் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் இரானுவத்தினர் மேற்கொண்ட கொடுமைகள் சம்பந்தமாக உள்நாட்டில் நடைபெறுகின்ற விசாரனைகளை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை இதற்கு நாங்கள் ஆதரவும் அளிக்கவில்லை.
ஜக்கிய நாடுகள் சபையின் மணித உரிமை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறுகின்ற மனித உரிமை கவுண்சில் நடைபெற உள்ளது. சர்வதேச மட்டத்தில் தமிழ் சிவிலியன்கள் மீது கட்டவிழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் மற்றும் நடைபெற்ற அநீதிகள் கொடுமைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும.; என என இராஜாங்க செயலாரிடம தெரிவித்தோம். என பாராளுமன்ற உறுப்பிணர் சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கமோ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவோ இதுவரை தமிழ் மக்களது அரசியல் தீர்வு, வடக்கில் இராணுவத்தினை வெளியேற்றுதல் தமிழ் மக்களின் மீளக்குடியமர்வு, போன்ற வற்றில் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. என தெரிவித்தோம்.
அத்துடன் இந்த ஆட்சி மாற்த்திற்;கு தமிழ் மக்கள் 95 வீதமானவர்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தவும் சிறிசேனாவின் 100 நாள் திட்டத்தினை ஏற்று செயற்பட்டதாகவும் இராஜங்க அமைச்சரின் சந்திப்பின்போது தெரிவித்தாக சுரேஸ் பிரேமச் சந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதே நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையிலும் அரசியல் குழு அமேரிக்க இராஜங்கச் செயலாளரைச் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
.jpg)