இலங்கையின் 67ஆவது சுதந்திர தினமும் இனமோதலுக்கான அரசியல் தீர்வும்..



ந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஆசியாவின் அழகிய தேசமான இலங்கையின் 67வது சுதந்திர தினம் இன்றாகும். இந்நிலையில் பிரதான தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. 1948ஆம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி இலங்கை பிரித்தானியாவின் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. இது பல்லின மக்கள் வாழும் தேசமாக காணப்படுகிறது. இந்த தேசத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சந்தோசமாகவும் சமாதானத்துடனும் வாழ மலர்ந்துள்ள 'மைத்திரி; யுகம்' வழிவகுக்குமா?

இனமோதலும் ஆயுதப் போராட்டமும்


சுதந்திர அரசு பன்மைத்துவ சமூக அமைப்பினை கவனத்தில் கொண்டு அமைக்கப்படவில்லை. பிரித்தானிய மாதிரியிலான ஒற்றையாட்சி மற்றும் மந்திரி சபை ஆட்சி முறை என்பன இப்பல்லின சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளின் பாரபட்சக் கொள்கைகள் சிறுபான்மையினரை குறிப்பாக தமிழர்களை அரச முறைமையிலிருந்து வெளித்தள்ளியது. இச்சூழல் இனங்களுக்கிடையில் பதட்டத்தினை தோற்றுவித்ததுடன் சந்தேகப் பார்வைகளையும் கிளப்பிவிட்டது.

பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கு எதிராக சாத்வீக அடிப்படையில் உருவாகிய தமிழர்களின் போராட்டம் ஆயுத வழிமுறையை நோக்கி நகர்ந்தது. சாத்வீக போராட்டத்தில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களைத் தோற்றுவித்தனர். அவற்றுள் பிரதானமான இயக்கமாக 'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு' வளர்ச்சி பெற்றது. அவ்வியக்கம் தமது கோரிக்கையாக தான் சார்ந்து நிற்கும் சமூகத்துக்காக 'தமிழீழத் தாயகம்' எனும் அரசை நிறுவுவதை தமது பிரதான இலக்காகக் கொண்டு அரசுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. இது பிரிவினைவாதப் போராட்டம் என்றும் நாட்டைக் கூறுபோடுவதற்கான சதி என்றும் பெரும்பான்மை ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்பட்டது. உண்மையும் அதுவாகத்தான் இருந்தது.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கீழ் அதிசயிக்கத்தக்க பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. காந்தியும் பெரியாரும் அம்பேத்காரும் எட்டாத வெற்றியை இப்பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் எட்டினார்கள். தெற்காசியாவில் வியாபித்திருக்கும் சாதி எண்ணங்கள் அழிக்கப்பட்டன. பெண் விடுதலைக்கான முன்னோட்டங்கள் அங்கு உருவாகியிருந்தன. போராட்ட உணர்வை மக்கள் உள்ளங்களில் ஏற்றி அங்கு மக்கள் ஒன்று கூட்டப்பட்டிருந்தார்கள். 

தமிழரும் தெற்காசிய மக்களும் பலனடையக்கூடிய இன்னும் பல சமூக மாற்றங்களுக்கான சாத்தியங்களை வடக்கும் கிழக்கும் தன்னுள் கொண்டிருந்தன. இது 2009ல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டுவிட்டது. இப்பிரதேசம் தன்னுள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் சாத்தியங்களையும் யுத்தத்தின் முடிவு சின்னாபின்னப்படுத்திவிட்டது.

விடுதலைப் புலிகள் பல தவறுகளை செய்திருக்கிறார்கள். அப்பாவி தமிழ், முஸ்லிம்,சிங்கள மக்களை கொன்று குவித்ததுடன் பொதுச்சொத்துக்களையும் உன்னதமிக்க தலைவர்களையும் துவம்சம் செய்து வந்துள்ளனர்.

தற்கால உலக ஒழுங்கைக் குலைத்து புதிய சக்தியாக பரிணமித்த வேளையில் பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் ; LTTE வெற்றிகொள்ளப்பட்டது.

முன்னைய தீர்வு முயற்சிகள்

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் சிவில் யுத்தமும் அரசியல் தீர்வினை வழங்குவதற்குப் பதிலாக ஆட்சியிலிருந்து வந்த பெரும்பான்மைச் சிங்கள உயரடுக்கு வர்க்கத்தினரால் அரச அதிகாரங்கள் தொடர்ச்சியாக மத்தியமயப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதன்படி சிறுபான்மையினரை அரசினுள் உள்ளீர்க்கத்தக்க அரச மறுசீரமைப்புக்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. 

எவ்வாறாயினும் சிங்கள, தமிழ் உயரடுக்கு வர்க்கத்தினரால் இலங்கையின் இனமோதலானது அதிகாரப்பரவலாக்கம் ஊடாக தீர்வுக்கு கொண்டுவரப்படாமைக்கான காரணமாக பின்வரும் அம்சம் நோக்கப்படுகின்றது. அதாவது விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையூடாக தங்களை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக காட்ட முன்வந்தமையே அரசியல் தீர்வினையும் இடம்பெறச் செய்யாது தடுத்தது என்பதாகும்.

உள்நாட்டுப் போரின் முடிவும் புதிய வாய்ப்புக்களும்

ஆதலால் 2009ல் விடுதலைப் புலிகள் வெற்றிகொள்ளப்பட்ட அதிசயிக்கத்தக்க விடயம் இலங்கையின் இனமோதல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக பல்வேறு தரப்பினராலும் கருதப்படுகின்றது.

பிரிவினைவாத பயமுறுத்தல் இல்லாத இச்சூழ்நிலை, எல்லா சமூகங்களினதும் உயர்தட்டு ஆளும் வர்க்கத்தினரால் சிறுபான்மையினரின் குழு உரிமைகள் கவனத்திற் கொள்ளப்படவாய்ப்பை ஏற்பட்டுத்தியது.இது ஒரு அரச மறுசீரமைப்புக்கான நிகழ்ச்சித்திட்டத்தை நோக்கி நகரவும் சந்தர்ப்பத்தை வழங்கியது. அவ்வாறான செயன்முறை இலங்கை அரசின் சமூக மற்றும் இனத்துவ அடிப்படைகளை ஜனநாயக மயப்படுத்த வாய்ப்பளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

; LTTE  ஐ வெற்றி கொள்வது ஒரு அரசியல் தீர்விற்கு வித்திடும்' என்ற தொனிப் பொருளிலான பிரச்சாரத்தினை மேற்கு நாடுகளில் இலங்கை அரசு முன்னெடுத்தது. இதன் மூலம் திரட்டப்பட்ட ஆதரவினூடாகயுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் டுவுவுநு வெற்றி கொள்ளப்பட்ட சூழலில்,இலங்கை அரசு அரசியல் தீர்வுக்கான எந்தவொரு காத்திரமான முயற்சியையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

2010 பொது தேர்தலில் 14 ஆசனங்களை வென்ற ; LTTE  'தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற தரப்பு' என்ற அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றது. ஒற்றையாட்சிக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற ரீதியில் அதிகாரப் பகிர்வின் ஊடான அரசியல் தீர்வினை வேண்டியிருந்தது. தனிநாட்டுக் கோரிக்கையினை மீள் வரையறை செய்த ஒரு வரலாற்றுத் திருப்பமாக இதனைப் பார்க்க முடியும். எனவே 2011 இல் அரசாங்கம் TNA உடன் பேசுவதற்கு முன்வந்தது. இதனடிப்படையில் 14 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனால் எந்தத் தீர்வுகளும் எட்டப்படாத பேச்சுவார்த்தைகளாக இவை காணப்பட்டன.

முடிவாக ; LTTE  அரசாங்கத்திடம் TNA பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான பதிலை எதிர்பார்த்திருந்தது.

அ) மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கையளித்தல்

ஆ) ஒத்தியங்கும் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைக்கு கையளித்தல்

இ) பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீண்டும் இணைத்தல்

ஜனாதிபதி அக்கோரிக்கைகளுக்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்தினார். மேலும் தமது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று பல மாதங்களின் பின்னர் பதில் கூறினார். எனவே ; LTTE  மற்றும் TNA பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை நிலையை அடைந்தது.

தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூலமாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையினை நடாத்த எத்தனித்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இது ஒரு கண்துடைப்பு முயற்சி எனக் கருதியதால் இம்முயற்சியும் கைகூடவில்லை.

; LTTE  தோற்கடிக்கப்பட்;டு அரசாங்க தரப்பு இராணுவ வெற்றியினூடாக பலம் பெற்றதனால் தமிழ்த் தரப்பு பலவீனமடைந்தது. இப்பலவீனம் ருPகுயு அரசு இனமோதல் தீர்வு விடயத்தில் கவனயீனமாக இருந்தமைக்கு காரணமாகுமென ஒரு தரப்பினர் விவாதிக்கின்றனர்.

தீர்வு அல்லது அரசின் மறுசீரமைப்பு எனும் அம்சம் முக்கியமாக இனமோதலுக்கான பின்வரும் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டதனை அவதானிக்கலாம்.

1. யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி

2. அரச அதிகாரத்தினை மத்தியமயப்படுத்தல்

இவ்வாறான கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் யுத்தத்துக்குப் பின்ரான ஆயுதக் களைவு, புனர்வாழ்வளித்தல், போராளிகளை சமூகத்துடனும் பொருளாதார செயன்முறைகளுடனும் ஒன்றிணைத்தல், இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தல், புனர்நிர்மாணம், ஏனைய அபிவிருத்தி செயன்முறைகளுடாக மோதலுக்கான தீர்வை அடைய முயற்சிக்கப்பட்டது. பகிரப்பட்ட அதிகாரம் மத்தியமயமாக்கப்பட்டது (18ஆவது திருத்தச் சட்டம், திவிநெகும சட்டமூலம், 19ஆவது திருத்தத்துக்கான முயற்சி). குறிப்பாக சிறுபான்மை அரசியல் கட்சிகளான ளுடுஆஊஇ நுPனுPஇ மலையகக் கட்சிகள் போன்றன ருPகுயு அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து கொண்டு மேற்படி மத்தியமயப்படுத்தலுக்கு ஆதரவு வழங்கிய விடயம் மிகவும் விசித்திரமான கண்மூடித்தனமாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச தலையீடு

இவற்றிற்கு அப்பால்,; LTTE அரசாங்கமானது வெளிநாடுகளின் தலையீடுகளற்ற உள்நாட்டு முயற்சியின் அடிப்படையில் அமைந்த ஒரு தீர்வுத் திட்டத்திற்கான முயற்சியே மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி நின்றது. சர்வதேச உறவுகளில் இடம்பெற்று வந்த அதிகாரத்துக்கான போட்டிநிலை மேற்கத்தேய நாடுகளின் தலையீட்டுடனான அரச மறுசீரமைப்பை கேள்விக்குறியாக்கியது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சர்வதேச பரப்பில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, இலங்கை மீதான அழுத்தத்தை மேற்கு நாடுகள் வழங்குவதைத் தடுத்தது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தந்திரோபாய வேலைத்திட்டங்கள் அண்மைக்காலத்திலேயே கணிசமான செல்வாக்கை இலங்கை விவகாரம் குறித்த சர்வதேச உறவுகளில் ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு தென்னாபிரிக்க மத்தியஸ்த முயற்சி கூட அரசியல் தீர்வு, அரச மறுசீரமைப்பு என்பன குறித்த விடயங்களில் முக்கியத்துவம் பெறவில்லை என்பதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

புதிய ஜனாதிபதியும் எதிர்பார்ப்புக்களும்

இவ்வாறான கவலைக்கிடமான சூழ்நிலைகளின் கீழேயே கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலினூடாக, புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டு அரசாங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை மக்கள் தமது அடிப்படை உரிமைகள், எதிர்காலம், இருப்பு போன்றவற்றைக் கருத்திற்கொண்டு அதிகப்படியான வாக்குகளை மைத்திரிக்கு அளித்துள்ளனர்.அவர்களது கனவு நிறைவேறுமா, இல்லையா என்பதப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இப்புதிய அரசாங்கம் தேசிய நிறைவேற்று சபையினை அமைத்து அதில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் 'இனமோதலை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள் இணங்கி இருப்பதாக' அண்மையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அரசியல் கைதிகள், உயர் பாதுகாப்புவலயம், காணிகளை மக்களிடம் கையளித்தல், காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கென அரசாங்கம் 'உயர்மட்டக் குழு'ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அரசினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதே அக்குழுவின் பிரதான நடவடிக்கையாக அமைய வேண்டும் என்றும் கடந்த வாரம் வுNயுஇன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலின் முடிவின் பின்னர் அமையவிருக்கும் அரசாங்கம் எவ்வாறான கொள்கைகளை இனமுரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் கடைப்பிடிக்கப் போகின்றதென்பதனைப் பொறுத்தே அடுத்த நகர்வுகளை அவதானிக்கலாம்.

சர்வதேச தலையீட்டுடன் கூடிய ஒரு குறைந்தளவான அரசியல் தீர்வு ஒன்றாவது முன்வைக்கப்படுவதற்கான சாத்தியம் தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இன்னும் சிலர் சிங்களப் பெரும்பான்மை உயர்தட்டு வர்க்கத்தினர் குறிப்பாக துர்ரு போன்ற பங்காளிக் கட்சிகளும் ஏனைய சிங்கள கடும்போக்குவாத அமைப்புக்களும் அரசியல் தீர்வு விடயத்தில் தேர்தலின் பின் விட்டுக்கொடுப்புகளைச் செய்யாது என்று கூறி நிற்கின்றனர்.

முடிவுரை

இக்கட்டுரையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின்படி, பெரும்பான்மை சமூகத்தின் உயர்குழாம் ஆட்சியாளர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக்கான போராட்டம் நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் சென்றுவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான அச்சம் இலங்கை அரசை மறுசீரமைப்பதனூடான ஒரு அரசியல் தீர்வினைப்பற்றி சிந்திப்பதற்கு தடையாக அமைந்தது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிப்பட்டமை, அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் கௌரவத்துடன் அரச முறைமையினுள் உள்ளீர்க்கப்பட்டு சுபீட்சமாக வாழ நல்லதொரு சந்தர்ப்பத்தை வழங்கியது.

மேலும், யுத்தத்திற்குப் பின்னரான முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் அரசியல் அதிகாரம் மத்தியமயப்படுத்தப்பட்டு,அவர் அதியுயர் அதிகாரம் கொண்ட நபராக தோற்றமளித்தார்;. தனது 67ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கையில், புதிய ஜனாதிபதியின் கீழ் அமையப் பெற்றிருக்கும் அரசாங்கத்தினூடாக அரசினை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற விடயமும் கேளடவிக்குறியான ஒன்றாகவே உள்ளது. ஆதலால் இலங்கையின் இனமோதலுக்கான தீர்வு'எதிர்பார்ப்புக்கள், முன்னுணர்வுகள், ஏமாற்றங்கள்' என்ற அடிப்படையை நோக்கி மீண்டும் ஒரு முறை நகர்ந்துவிடுமா என்ற அச்சத்தை தோற்றுவிக்கின்றது.

எம்.எம். பாஸில்
விரிவுரையாளர்,
அரசியல் துறை,
கலை கலாசார பீடம்,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -