சுகாதார பிரச்சினைகளை ஆராயும் முகமாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு சட்டத்தரனியும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே.எம்.லாஹீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை வைத்தியசாலை வட்டாரம் அவருக்கு தெரியப்படுத்தியிருந்தது அவைகளை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியசாலையில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடையினை நிவர்த்தி செய்யும் வகையில் அவசர உடனடித்தேவையான ஜென்ரேட்டர் ஒன்றினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.
தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகள் வைத்தியரினால் முன்வைக்கப்பட்டன நீர் பவுசர் சாரதி நியமனம்,தொழிலாளிகள் நியமனம் குடிநீர் இணைப்பு பெறுதல்
பெண் வைத்தியர் ஒருவரை நியமித்தல்,கொரிடோர் அமைத்தல்,சுற்று மதில் அமைத்தல்,புதிய வார்ட் கட்டிட தொகுதி அமைத்தல் போன்ற பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாஹீர் தெரிவித்தார்.இந் நிகழ்வில் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)