அண்மையில் தென்னை பயிர்செய்கை சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட கண்டி யஹலத்தென்னை பிரதேசத்தை சேர்ந்தவரான ஹிதாயத் சத்தார் அவர்கள் உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தென்னை பயிர்செய்கை சபை தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐக்கிய தேசிய கட்சி மேல்மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் கலந்துகொண்ட அதேவேளை தென்னை பயிர்செய்கை சபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் கதாநாயகனான ஹிதாயத் சத்தார் தனது உரையில் தனது குருநாதரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களுக்கும் தனது முன்னேற்ற பாதையில் எப்போதும் தோல்கொடுத்த குடும்பத்தினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் தென்னை பயிர்செய்கை சபையின் வளர்ச்சிக்காக தன்னால் ஆன சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க போவதாக உறுதியளித்ததுடன் தென்னை பயிர் செய்கை சபை தொடர்பான தகவல்கள் புள்ளிவிபரங்ளுடன் தெரிவித்து நிகழ்வில் கலந்துகொண்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க விடயம் நிகழ்வின் நிறைவில் நன்றி உரை நிகழ்த்திய தென்னை பயிர்செய்கை சபையின் பணிப்பாலர்களுள் ஒருவரான தனது உரையில் சுமார் நாற்பத்து நான்கு வருட தென்னை பயிர்செய்கை வரலாற்றில் எட்டாவது தலைவராக ஹிதாயத் சத்தார் அவர்கள் பதவியேற்கிறார் என குறிப்பிட்டார்.
மேலும் தென்னை பயிர்செய்கை சபை தலைவர்களாக இதுவரை இருந்தவர்கலுள் வயதில் மிக இளமையானர் இவர்தான் என குறிப்பிட்ட அவர் இலங்கை அரச நிறுவனங்களில் பதவி ஏற்றுள்ள தலைவர்கலுள் தான் அறிந்தவரை ஹிதாயத் சத்தார் அவர்களே வயதில் இளமையானவர் என சுட்டிக்காட்டினார்.
கம்பளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர் சந்தைப்படுத்தல் துறையில் பட்டதாரியுமாவர்.கடந்த மத்திய மாகாண சபை தேர்தலில் களமிறங்கிய இவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய மாகாண சபைக்கு தெரிவாகவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட முகாமையாளராக இருக்கும் இவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் பிரத்தேய செயலாளரும் ஆவார்.
.jpg)