கிழக்கு மாகாண முதலமைச்சராக (06) ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து அங்கு பிரசன்னமாயிருந்த மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முதலமைச்சர் மேற்கன்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், ' முன்பு இருந்த ஆளுநரை விட தற்போது சிவில் சேவை சார்ந்த ஒரு ஆளுநர் எமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பது கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் வெற்றியாகும்.
இப்பதவி மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கவும் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன். மேலும் எனது கட்சியின் வழிகாட்டலுடனும் ஜனாதிபதியின் ஆலோசனையுடனும் இம்மாகாண மக்களுக்கு எனது சேவைகளை செய்வதுடன் எனக்கு இப்பதவியை வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், செயலாளர் நாயகம், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், எனது ஊர் மக்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியைக் கூறிக் கொள்வதாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் எம். ரீ. ஹசன் அலி, பொருலாளர் எம்.எஸ் அஸ்லம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர். எம். அன்வர், அலிசாஹிர் மௌலானா, ஜே.எம் லாஹீர் உட்பட அரச உத்தியோகத்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.