பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு நேற்று 06.02.2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள், பாடசாலை அதிபர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, நகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கல்லூரியின் நுழைவாயில் உட்பகுதி சிரமதானம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டதோடு மேற்படி பாடசாலை வளாகத்தில் அடர்ந்து காணப்பட்ட புற்கள் மற்றும் கழிவுகள் இச் சிரமதானத்தின் போது சேகரிக்கப்பட்டு நகர சபையினால் அகற்றப்பட்டது.
மேற்படி சிரமதானத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற 13.02.2015 வெள்ளிக்கிழமை மேற்கொள்வதென தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள சகோதரர்கள் அனைவரும் எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு வருகை தருமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம் என இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
.jpg)
.jpg)
.jpg)
