அறுபத்தி ஏழாவது சுதந்திர தினம் இலங்கையில்......

ன்னைத் தெரியுமெனக்கு கனத்தபேர் உரிமைக்காய் இறந்து கிடந்தபோது
விடிவுக்காய் விழித்திருக்க மறுத்தவன் நீ...உன்னைத்தெரியுமெனக்கு....

ஓநாயும் முதலையும் விளங்காதபாஷையில்
விளக்கம் தந்த மேடைக்கு முன்னால்
கைதட்டிச் சிரித்த கூட்டத்திலுனைக்;கண்டவன் நான்

நெருப்பு நீர் பருகும் பாதாள நரகில்
எல்லாப்பேராசைகளும் மனிதனாகத் திரிந்ததை
அனுமதித்தவன் நீதானே?.............

இருப்பதற்காய் இறக்காமல்
இறந்தபின்னும் இருப்பதைப்பற்றிய வணக்கத்தை நாம் தேடியபோது
ஒழித்துக்கொண்டவனே உன்னைத்தெரியுமெனக்கு.............

நம்மைவேறுபடுத்தும் சுயநலமென்ற வேதந்தான்
உன்னுடையது................
உணர்வுகளை எல்கைப்படுத்த முடியாமல்
ஒவ்வொரு வினாடியும் நீ விகாரப்பட்டுக்கொண்டிருப்பதும் தெரியுமெனக்கு..............

பேய்களின் பிரசவத்தில் பிறந்தவர் கைகளில்
நமது இஸ்லாமியம் போய்விடுமோ என்ற பயம் எமக்கெழுந்தபோது.
பதவியெனும் முக்காடிட்டுக்குள் கிடந்தவனே......

கல்லைக்கரைத்து............மண்ணைப்பொரித்து................
கட்டைகளையும் சுட்டுத்தின்னும் பேராசைக்காரனாக
இன்னும் எத்தனைகாலந் தான் வாழப்போகிறாய்...........

பட்டதுயரும் பத்தியங்களும் பாவங்களும் போதும்
விட்டபிழை இனிவிடமாட்டோமென்று சத்தியம் செய்து வா...............

பிளவுகளின் பாதையில் வெகுதூரம் அலைந்து
பித்துவெடித்த நம் கிராமத்தின் பாதங்கள்
இனியாவது பூவில் நடக்கட்டும்................

உலகப் புதினங்களிலும் ஊடகப்பதிவுகளிலும்
இச்சையின் நுகர்ச்சியால் அறிவில் எச்சில் பதிக்கும்
பேராசையின் பிடியை அடக்கிக் கடமையைச் செய்வோம் வா...

இன்று சுதந்திர தினம்
நேர்மை பொறுமை கடமை
திறமையெனும் பண்பிய லாண்மையின் உண்மைகள்
இனி நமது தீவில் விளையலாம்
இன்று சுதந்திர தினம்

மனத்தால் மரமாகி மனித குணத்தை மறந்து
யாப்பு விதி இழந்து தோப்பைக்கலக்கும்
பட்டாசு விழாக்கோலங்களெல்லாம் வீணானதே

மாலைகளுக்காக காத்திருக்கும் பிணங்கள் நடமாடுவதால்
நாம் அதைத் தலைவன் என்று சொல்லுவது தவறு

வந்ததெல்லாம் வரும் போது புதிதாகத் தெரிந்தாலும்
நொந்தமனதில் எது வந்தாலும் வேதனையைத் தவிர
வேறேது நண்பா ................

என்கிராமத்து பறனின்
நட்டகட்டையின் பட்டையில்
தினமும் பூஞ்ஞனப் பூவாக இறந்து தளைக்கும்
கனவுகளை உனக்குத்தெரியுமா?..... 

அந்த அறுபத்தி ஏழாவது நியாயத்திலிருந்தேனும் நீயும்
நிஜமாக்க வா
இன்று சுதந்திரதினம்
எச்.ஜே.எம்.இன்ஹாம்
எதிர்க்கட்சித்தலைவர் 
பிரதே சபை அக்கரைப்பற்று
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -