அமைச்சர் ஹலீம் விடுத்துள்ள 67வது சுதந்திர தின செய்தி..

இக்பால் அலி-

ந்நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள வேளையில் இலங்கை வாழ் அனைத்து மக்களும் 67 வது சுதந்திர தினத்தை பரிபூரமாண இதயசுத்தியுடன் கொண்டாடுகின்றனர் என்று முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.. எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சர் ஹலீம் விடுத்துள்ள தமது சுதந்திர தின செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது.

இந்நாட்டுக்காக தமது இன்னுயிர்களை விட்ட இராணுவத்தினரையும் தியாகங்கள் புரிந்த தவைவர்களையும் நினைவில் கொள்ளுதல் அவசியமாகும்.

நீண்ட கால இடைவெளிக்குப் பினனர்; இந்த இடைக்கால அரசாங்கத்தில் எமது நாட்டில் ஐக்கியம் சகவாழ்வு மலர்ந்திட சிங்கள. தமிழ். முஸ்லிம். கிறிஸ்தவ சமய அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. மனித குல ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு ஒளிவுமறைவின்றி இது வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய மனபாங்கு ரீதியிலான மாற்றத்தை இப்போது நாம் காண்கின்றோம். 

அத்துடன் தாய் மண்ணின் பாசமும் அதிகரித்து பற்றுறுதிமிக்கதாகக் காணப்படுகிறது. இந்நாட்டில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் சமநிலை பேணுகின்ற தன்மை காணப்பட்டது. அதுதான் நாம் அனைவரும் இலங்கையர் என்று உள்ளார்ந்த ரீதியாக ஏற்றுக் கொள்கின்ற தன்மையாகும். இவ்வாறானதொரு சுதந்திர தினத்தை கடந்த கால அரசாங்கத்தில் கொண்டாட முடியவில்லை. இம்முறை நாம் அனைவரும் சந்தோசமாக கொண்டாடுகின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -