மருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான 'முன்மொழிவுகளும்,ஆவணப்படுத்தலும்' கலந்துரையாடலும்!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான 'முன்மொழிவுகளும், ஆவணப்படுத்தலும்'தொடர்பான ஒன்று கூடல் இன்று (07-02-2015) காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉச்பீட உறுப்பினரும்,மருதமுனை அமைப்பாளரும்.கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இந்த உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான 'முன்மொழிவுகளும், ஆவணப்படுத்தலும்' நிகழ்வு நடைபெற்றது.

இங்கு கல்வி,சுகாதாரம்,வீதி நிர்மானம்,குழாய் நீர,; வடிகான் புனரமைப்பு,நூலக அபிவிருத்தி,பாடசாலைகளுக்கான கட்ட நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்கள்,மத்ரசாக்கள் உள்ளீட்ட மருதமுனையின் முக்கிய அபிவிருத்தி பற்றி முழுமையாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான திட்ட வரைவுகளும் தயாரிக்க முன்மொழியப்பட்டது.

இவ்வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும,; நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் ஊடாக முன்னெடுப்பதற்கும் முன்மொழியப்பட்டது. 

இந்த நிகழ்;வில் மௌலவிகளான ஏ.அபூஉபைதா மதனி.ஏ.ஆர்.செயினுலாப்தீன் ஷர்க்கி எம்.எல்.முபாறக் மதனி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் ஏ.எம்.அபுல்ஹக்கீம் ஆசிரியர், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,ஒய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம்.பிரதிக்கல்விப்பணிப்பாளர். பி.எம்.யஸிர் அறபாத் உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப், டாக்டர்களான ஏ.எல்.எம்.மிஹ்லார், ஏ.ஆர்.எம்.ஹாரிஸ்,பி.எம்.சுகைப்தீன். விரிவுரையாளர் எம்.எம்.பாஸில், ஆகியோருடன் அதிபர்கள்.ஆசிரியர்கள்,பள்ளிவாசல்களின் தலைவர்கள்,வர்த்தகர்கள் உள்ளீட பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -