ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஏ.எம். ஜெமீல் தான் நடந்து கொண்ட முறை தவறானது என ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருவாரானால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடன் நீக்குவதற்கு தயாராக இருப்பதாக கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (06) இது தொடர்பில் சில முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் புதிய முதல்வரான ஹாபிஸ் நஸீரின் நிர்வாகத்தின் கீழ் இவருக்கு மாகாண அமைச்சர் பதவி ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
