கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தனக்கு தற்போது கருத்து வெளியிட முடியாது என்றும் அதன்று இன்னும் ஒருவார கால அவகாசம் தேவை என்றும் சொலிசிடர் ஜெனரல் சுகத கம்லத் இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி கடந்த மாதம்19ம் திகதி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் சுகத கம்லத், கேபி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
சொலிசிடர் ஜெனரல் முன்வைத்த கால அவகாவ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விஜித் மல்லகொட, எதிர்வரும் 26ம் திகதிக்கு மனுவை பிற்போட்டுள்ளார்.
குறித்த மனு கடந்த 5ம் திகதி விசாரணைக்கு வந்தபோது குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டை முடக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குமரன் பத்மநாதன் பல பெயர்களின் கடவுச்சீட்டு தயாரித்து இலங்கை வந்துள்ளதாக தெரியவருகிறது.
