சுலைமான் றாபி-
அண்மைக்காலமாக நிந்தவூரில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கருத்திற்கொண்டு அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பிரதான வீதியினூடாக பிரயாணம் செய்யும் வாகனங்களின் வேகத்தினைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தினரால் இன்று (19) வேகத்தடை பலகைகள் நடப்பட்டன. அவற்றுள் முச்சக்கர வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பன மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலும், கார், பஸ் வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மணிக்கு 50கிலொ மீற்றர் வேகத்திலும் பயணிக்க வேண்டுமென அவ்வேகத்தடைப் பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் மணிக்கு 50கிலொ மீற்றர் வேகத்தில் செல்லும் வாகனங்கள் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை குறித்த வேகத்தில் பயணிக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த வேகத்தடைப் பலகைகளை நன்கு அறிந்து சாரதிகள் கவனமாக தங்கள் வாகனங்களை செலுத்தும் போது இவ்வீதியில் இடம்பெறும் விபத்துக்களை ஓரளவு தடுக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)