கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு காணிகளை தனது நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்தளித்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக காணி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த அவர், தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியை பெற்றுள்ளதன் காரணமாகவே இந்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களை கிராமங்களில் குடியேற்றும் போர்வையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலங்களை கூட இந்த அமைச்சர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் கொடுத்துள்ளதாக அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.
அமைச்சரை பாதுகாக்கவே அரசாங்கம் அவருக்கு எதிரான விசாரணைகளை முடக்கியுள்ளதாகவும் இது மக்களுக்கு செய்யும் பாரிய அநீதி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்வின்