கிழக்கு மாகாண சபையில் அமைச்சரவையை அமைப்பதில் சிக்கல்!

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 6 அரசியல் கட்சிகளும் அமைச்சு பதவிகளை கோருவதால், அமைச்சரவையை நியமிப்பது மேலும் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபைக்கு 4 அமைச்சர் பதவிகளே உள்ளன. இந்த நிலையில், அனைவரும் அமைச்சு பதவிகளை கோருவது தீர்க்க முடியாத பிரச்சினை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாகாண சபையில் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததுடன் நிர்வாகத்திலும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன அங்கம் வகித்து வருகின்றன.

எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அடுத்த சில தினங்களில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி இணக்கப்பாட்டுக்கு வர எண்ணியுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -