பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் 28வது வருட அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வு 21-02-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப்பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்இகாழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி)இ குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் உப தலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)இஅதன் செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர்இஅதன் உப செயலாளர் மௌலவி ஏ.எம்அப்துல் காதர் (பலாஹி)இஅதன் பொருளாளர் எம்.ரீ.எம்.ஹாலித் ஜேபி இஅதன் பரிசோதகர்களான மௌலவி எச்.எம்.ஷாஜஹான் (பலாஹி)இ மௌலவி எம்.ஏ.ஹாலித் ஹஸன் (பலாஹி) உட்பட காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின்; பிரதிநிதிகள்இஉலமாக்கள் இஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு விருதும்இபரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மாணவர்களுக்கு குர்ஆனை ஓதிக்கொடுத்த முஅல்லிம்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வில் காத்தான்குடிஇ சிகரம்இ காங்கேயனோடைஇ ஒல்லிக்குளம் சமாதான கிராமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள 18 குர்ஆன் மத்ரஸாக்களைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)