ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரமூட்ட, சாய்ந்தமருதில் ஹிருணிகா




எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன் -

டந்த ஜனாதிபத்தி தேர்தல் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு பல்வேறுசந்தர்ப்பங்களில் வருகைதரவிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள், இன்று அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளுக்கு 2015-02-08 ல் வருகைதந்திருந்தார்.

மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் பொத்துவில்,சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு, ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்களுக்குமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை செய்வதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் வர்த்தக சமூகத் தலைவர் ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில்இடம்பெற்ற நிகழ்வில் எம்.எம்.ஜுனைதீன் ஹிபத்துல் கரீம் உள்ளிட்ட பிரமுகர்களுடம் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் வருகை தந்த பிரமுகர்களும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -