வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவேண்டும் கிழக்கு முதலமைச்சர் அழைப்பு!

வ்வொரு ஊரிலும் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவேண்டும். நமது ஒற்றுமையை நாம் பலப்படுத்துவோமேயானால் இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தனை அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மூதூர் பிரசே சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் மூதூர் பொதுமைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிப் பெருவிழாவின் போது கலந்து கொண்டு பேசும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்தி அவர்களுக்கு இங்கு தொழில் வாய்ப்புக்களைப் வழங்குவது சம்பந்தமாக நாம் சிந்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எங்களது சகோதரியை அல்லது தாயை ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு எப்படி நாம் நிம்மதியாக இங்கு இருக்க முடியும். எனவே, அவர்கள் வெளிநாட்டிற்குச் செல்லாது தொழில் வாய்ப்புக்களை இங்கு வழங்குவதற்கு திட்டமிடல் வேண்டும். 

அதேபோல எந்தவொரு இளைஞரும் வெறும் தொழிலாளியாக மட்டும்
வெளிநாடு செல்வது நிறுத்தப்படல் வேண்டும்.

இந்த வருடத்திற்குள் மூதூரில் ஆடைத் தொழிச்சாலையொன்றை அமைத்துத் தருவதற்கு வாக்குறுதியளிக்கின்றேன். மூதூரை முழுமையாக நாம் எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயலாற்றவேண்டிய கடமைப்பாடு எல்லோருக்கும் இருக்கின்றது. வேறுபாடுகளை மறந்து அதற்காக ஒற்றுமைப்படவேண்டுமென்று நான் அழைப்பு விடுக்கின்றேன்.

ஓவ்வொரு ஊரிலும் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படவேண்டும். நமது ஒற்றுமையை நாம் பலப்படுத்துவோமேயானால் இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தனை அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என்றார்.

இதன்போது உள்ளூர் அரசியல் வாதிகளினாலும் முக்கியஸ்தர்களினாலும் நிகழ்வில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி, நீர் வழங்கல்இவடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உள்நாட்டு போக்குவரத்துப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.முபீன், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயிஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான பி.ரி.எம்.பைசர், பி.ரி.எம். ஆப்தீன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பீ.கே. கலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -