இக்பால் அலி-
கடந்த ஆட்சி காலத்தில் பாராளுமன்றதில் பெண்கள் பார்தா அணிவது தொடர்பான பிரச்சினைகள் வந்தன. பாடசாலை செல்லும் மாணவிகள் கூட பர்தாவை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பிரச்சினைகள் எழுந்தன.
எமது பிரதமர் மந்திரியும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ரனில் விக்கிரமசிங்க எழுந்து முஸ்லிம்களுடைய சமய கலாசாரத்தை பின்பற்றி நடப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று உரையாற்றினார் அதே போன்று நானும் இவ்வாறு பாராளுமன்றத்தில் பேச முடிந்தது.
இது தொடர்பாக எந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பேச முன்வர வில்லை. ஆனால் நாங்கள் பேசினோம். பாதுகாப்புத் தொடாபாகவும் நடவடிக்கை எடுத்தோம். எல்லா விடயங்களிலும் முஸ்லிம்களுக்கு பக்க துணையாக இருந்துள்ளோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய கெகுணுகொல்ல தேசிய பாடசாலையின் இல்லவிளையாட்டுப் போட்டியில் பாடசாலை மைதானத்தில் அதிபர் எம். டி. எம் முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அங்கு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
நான் அரசியல் இந்த நிலைக்கு வருவதற்கும் இவ்வாறு நான் கல்வி அமைச்சராக இருப்பதற்கும் இந்தப்பகுதியிலுள்ள ஒரு மக்களின் பங்களிப்பும் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை கண்ணியமான முறையில் மதிக்கின்றேன். அதனை தெளிவாகச் செல்ல முடியும். அது எல்லோருக்கும் தெரியும். இதனைத் தொடர்ந்து எனக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
எங்களுடைய தேவையாக இருப்பது கல்வியை மேம்படுத்த வேண்டியதாகும். கடந்த காலத்தைப் பார்த்திருப்பீர்களாயின் கல்வித் துறை அதிகம் பிரச்சினைகளுக்கு உட்பட்டிருந்தன. ஊழல் மோசடி ஆணைக்குழுவின் அறிக்கையின் படி கல்வித் துறையில் தான் அகதிம் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
நாங்கள் தற்போது கல்வித் துறையை மாற்றியமைக்க ஆரம்பித்துள்ளோம் எங்கள் கிராமத்திலுள்ள பெற்றோர்களுடைய பிள்ளைகளுக்கு அல்லது பெற்றோர்களுக்கு முன்னோக்கிச் செல்வதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது கல்வியாகும். எங்களுக்கு வேறு நாடுகளைப் போன்று எண்ணெய் வளங்களூடாகப் பெறும் நிதி வசதிகள் இல்லை.
வேறு நாடுகளில் காணப்படும் வளங்கள் இல்லை. இந்த கிராமத்திலுள்ள பெற்றோர்கள் எவ்வாறு கஷ;டப்பட்டு படிப்பிப்பதன் மூலம் அதன் மூலம் பாரிய முன்னேற்றத்தைக் காணலாம். நாம் இங்கு ஒரு காலத்தில் ஓலைக் குடிசை மண்வீடுகள் எல்லாம் கண்டோம். இன்று அவ்வாறு இல்லை சகல வீடுகளும் கல்லால் கட்டப்பட்டு வீட்டு முற்றத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு வீடுகளிலும் ஆசிரியர்களும் வைத்தியர்களும், பொறியலாளர்களும் அரச சேவையாளர்களும் உள்ளனர். எல்லாக் குடும்பங்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இலவசக் கல்வி முறையால் உருவானதொன்றாகும்.
எதிர்வரும் காலத்தில் நூற்றுக்கு 6 விகிதம் நிநி ஒதுக்கீடு செய்து கல்வித் துறையை மேலும் கட்டி எழுப்பவுள்ளோம்.
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய எங்களால் முடியும் அதுவும் குளியாப்பிட்டியிலுள்ள அனைத்துப் பாடாலைகளில் காணப்படும் பௌதிக வளப்பற்றாக்குறை உட்பட அனைத்து தேவைகளும் நிறைவேற்றி வைக்க அரசாங்கம் தொடர்ந்து செல்வதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
இன்னும் சொற்ப காலத்தில் கொரியாவின் ஆதரவுடன் 1600 கோடி ரூபா செலவில் விஞ்ஞானப் பிரிவுகள் குளியாப்பிட்டியிலுள்ள பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதேபோன்று தமிழ் மொழி மூலப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று குளியாப்பிட்டியிலுள்ள வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
நாங்கள் எந்த வேறுபாடுகளுமின்றி முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். விசேடமாக முஸ்லிம் மக்கள் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என்று வேறு பிரித்துப் பார்ப்பதில்லை.
கடந்த காலத்தில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற மோசமான செயற்பாடுகளை கண்டறிந்துள்ளோம்.
பெற்றோர்களுக்கு பெரும் சுமைகள் ஏற்படுத்தியதற்கு எதிராகவும் அனுமதியில்லாமல் பாடசாலைகளில் பணம் அறவீடுகள் செய்யப்பட்டதற்கு எதிராகம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
முதலாம் தரம் தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையிலுள்ள மாணவர்கள் போசாக்குணவின்றி உள்ளனர்.
இவைகள் யாவற்றையும் கவனத்திற் கொண்டு செயலாற்றவுள்ளோம் எனறு அமைச்சர் மேலுத் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
