அறிவு மற்றும் புத்தாக்கத்தினூடாக உற்பத்தித்திறனை மேம்படுத்தல் என்ற தொனிப்பொருளை மையமாகக்கொண்ட சர்வதேச ஆய்வரங்கு ஜூன் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் நடத்தப்பட உள்ளது. யாழ் பல்கலைக்கழக பொதுமண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20) காலை துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் உள்ள சகல பீடங்களும் ஆய்வரங்கை செய்ய வேண்டும். ஆய்வின் மூலம் எமது பகுதியை மேம்படுத்தலாமென்றார்.
வணிகபீட தலைவர் தி.வேல்நம்பி அங்கு கருத்து தெரிவிக்கும் போதுஇ 'பல்கலைகழக கற்றலுக்கு மேலதிகமாக ஆராய்ச்சி செய்வது அவசியம். இதன் அடிப்படையில் அறிவியல் அபிவிருத்திக்கு ஆய்வு செய்வது முக்கியமானது. இவ்வாறான ஆய்வின் மூலம் பிராந்திய மற்றும் தேசிய அபிவிருத்தி அறிவின் புத்தாக்கத்தினூடாக உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
சமகால முகாமைத்துவம் என்ற தொனிப்பொருளில் கடந்த ஆண்டு முதலாவது ஆய்வரங்கை வெற்றிகரமாக நடத்திய வணிகபீடம் இந்த ஆண்டும் ஆய்வரங்கை ஏற்பாடு செய்துள்ளது. சமூகத்துக்கான அறிவியல் பங்களிப்பை வழங்க வேண்டிய கடமை பல்கலைக் கழகத்துக்கு உண்டு. இந்த ஆய்வரங்கு பற்றிய விபரங்களை வெளிநாடுகளுக்கும் அறிவித்து அதிக ஆய்வுகளை உள்வாங்க வேண்டும்' என்றார்.

.jpg)
.jpg)
.jpg)