புதிய கட்சி உருவாக்கும் விமல்- தலைவர் மஹிந்த!

திர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து விமல் வீரவன்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்தன, திஸ்ஸ விதாரண, டியூ. குணசேகர ஆகியோருடன் அண்மையில் கலந்துரையாடியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது பேசப்பட்டு வரும் சில முன்னாள் அமைச்சர்களும், வீரவன்ஸவின் யோசனைக்கு சாதகமான பதில்களை வழங்கியுள்ளனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த யோசனை குறித்து திட்டவட்டமான முடிவு எதனையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி தனிக் கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -