100 நாள் திட்டத்துக்குள் சாய்ந்தமருதில், ஜெமீலின் முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை


எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

மைந்துள்ள புதிய ஆட்சியின் 100 நாள் திட்டத்துக்குள் சாய்ந்தமருதில் எவ்வகையான திட்டங்களை உள்வாங்குவது சம்மந்தமான கருத்தறியும் கலந்துரையாடல் கிழக்குமாகாணசபை உறுப்பினரும், மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு குழுக்களின் தலைவருமான ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில் 2015-02-01ல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகரஅபிவிருத்தி மற்றும் நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டார்.

குறித்தநிகழ்வில் சாய்ந்தமருதில் இருக்கும் பலதுறைகளிலும் அனுபவமும் நிபுணதத்துவமும் உள்ள பலர் கலந்து கொண்டதுடன் ஊரின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு குழுவாக செயற்பட்டு அபிவிருத்தியின் உண்மையான பயனை அடைய உழைப்பது என உறுதிபூண்டு அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களிடம் சாய்ந்தமருதுசார்ந்த திட்டங்களை முன்வைத்ததுடன் அதற்காக உழைப்பதாகவும் உறுதியளித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் றவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கான திட்டங்களை தான் உடனடியாக நிறைவேற்றித்தருவதாகவும் விசேடமாக தோணாவை அபிவிருத்தி செய்வதையும் பொலிவேரியன் கிராமத்துக்கு அருகில் இருக்கும் காணிகளை மக்கள் குடியிருப்பு பிரதேசங்களாக மாற்றி கல்முனை நகரஅபிவிருத்தித் திட்டத்துக்குள் உள்வாங்கி செயற்பட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் இனம்காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் அதற்க்கு இங்கிருக்கும் புத்திஜீவிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிழக்குமாகாணசபை உறுப்பினரும், மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பு குழுக்களின் தலைவருமான ஏ.எம். ஜெமீல் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -