பேக்கரி தயாரிப்பு உணவுகள் அனைத்திற்கும் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் கோதுமை மாவுக்கான விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
