இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை விமர்ச்சிப்பதும் வெளிநாட்டிலுள்ளவர்கள் அவர்களுடைய உருவப்படங்கiயெல்லாம் எரிப்பது என்பது ஓர் ஆரோக்கியமான செயற்பாடாகக் கருத முடியாது என்று சிவன் புதிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஷ் வேலாயும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் சுய உணர்வு பூர்வமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடியது இதுவே முதற் தடவையாகும். கடந்த தசாப்பத காலங்களாக இராணுவத்தினுடைய அழுத்ததின் காரணமாகவே சுதந்திர தினத்தை பெயளரவில் கொண்டாடினர். இம்முறை மட்டும் தான் சுய உணர்வு பூர்வமாக சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கொண்டாடினர்.
என்னுடைய வாழ்க்கையில் முதற் தடவையாக கண்டியிலுள்ள வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்டது என்பது கூட இதுவே முதற் தடவை. அத்துடன் இந்நாட்டிள்ள சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் கிறிஸ்தவ மக்களும் அரசின் சுதந்திர தினத்தை பால் சோறு பகிர்ந்துண்டு பொதுச் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு சுயமாக சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இலங்கையில் காணப்படும் நேர்த்தியான அரசியல் சூழலைக் கருத்திற் கொண்டு தமிழர்களின் துயரங்களை களைவதற்கு தூர நின்று எந்தப் பயனுமில்லை நம்பகத்தன்மையுடன் நெருங்கி செயற்பட்டால் மட்டும் பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நல்லெண்ணத்துடனே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனும், சுமந்திரனும் இலங்கை அரசின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளக்காரணம் எனக் கருதலாம்.
ஆனால் அதேவேளை இதனை விமர்சிப்பவர்கள் தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையை தொடர்ந்து சூனியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றவர்கள் செய்கின்றார்களே தவிர வேறு எவரும் செய்யவில்லை. வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் குறிப்பிட்ட ஒரு சிலர் தங்களுடைய சுகபோக வாழ்க்கை மேற்கொண்டு செல்வதற்கு இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையில் சிங்கள தமிழ் மக்கிளிடையே ஒரு சமூமான ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு நல்ல நிலைதோன்றுமாயின் துவேசமான கோசங்களூடன் பிழைப்பு நடத்தி கொண்டிருப்பவர்களுக்கு இயல்பாகேவ தடை வந்து விடும் என்ற அச்சம் இருக்கிறது. இந்த நோக்கிலேதான் தங்களுடைய எதிர்ப்பு வாதங்களை முன் வைக்கின்றனர். இதனால் தமிழர்கள் மீது நல்லெண்ணம் வைத்துச் செயற்பட்டு வரும் தென்னிலங்கை சிங்களவர்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் அச்சமும் ஏற்பட வாய்ப்புண்டு.
தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் இலங்கை அரசின் சுதந்திர தினத்திற்கு சென்றமை தொடர்பாக யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக நல்லெண்ண சமிக்ஞை ஒன்றை எதிர்பார்த்தே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனை வைத்து சுயலாபம் தேட முனையும் நபர்கள் கூட தற்கால சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற யாதார்த்தை உணர்ந்து செயற்படுதல் அவசியம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை தொடர்ந்து துன்ப நிலைக்கு உள்ளாக்கி பிழைப்பு நடத்துவதை தவிர்த்து விட்டு இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுயமாரியாதையுடனும் கௌரவத்துடனும் நிம்மதியாகவும் வாழ வழிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)