அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சிக்குள் மீண்டும் பிளவு

ஏ.எம்.முகம்மட்-சம்மாந்துறை-

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட்டை நியமிப்பதற்கான பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதன் மூலம் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தான் ஒரு சமூகவாதி என்பதை மீண்டும் ஒரு தடவை நிருபித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அஹமட்டை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தடுத்து தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் முயற்சி செய்த காரணத்தினால் இதனை அறிந்த மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கட்சியின் தலைவரின் போக்கை நிராகரித்து ஹாபிஸ் நஸீருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் தனது கையொப்பத்தையும் இட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் முதலமைச்சராக வரவிடக்கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான ஏ.எம்.ஜெமீலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றார்.

தாங்கள் அமைக்கும் ஆட்சியில் ஜெமீலுடன் புல்மோட்டை அன்வரையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும் இது தொடர்பில் அன்வரையும் அழைத்துக் கொண்டு வருமாறும் கேட்டுள்ளார். இங்கு நடந்த விடயங்களை மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தனது சக உறுப்பினர் அன்வரிடம் கூறியிருக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத அன்வர் உடனடியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்படி பார்க்கின்றபோது கிழக்கின் முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் பகிரத முயற்சி எடுத்துள்ளது தெளிவாகின்றது.

 இவ்வாறான செயற்பாட்டை அறிந்து கொண்ட அமைச்சர் ரிசாத்தின் அணியைச் சேர்ந்த சிப்லி பாறூக் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதையும் விட ஹாபிஸ் நஸீர் வருவதே முஸ்லிம் சமூகத்திற்கு நல்லது என்பதை உணர்ந்து இன்று மதியம் தனது கையொப்பதி்தையும் இட்டு ஹாபிசுக்கு ஆதரவளித்துள்ளார்.

தனது அரசியல் தீர்மானங்கள் எப்போதும் சமூகத்திற்காகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒரு தடவை சிப்லி பாறுக் நிருபித்துள்ளார். முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று புதிய புராணம் பாட ஆரம்பித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு செய்த சூழ்ச்சிகள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் சமூக உணர்வால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கட்சி இருக்கக் கூடாது என்பதில் அக்கரை கொண்ட வெளிநாட்டு உளவுப்பிரிவும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்று முஸ்லிம்களின் பற்றாளர்களாகவும், தூய்மையான அரசியல் செய்வதற்காக புறப்பட்டவர்களாகவும் காட்டிக் கொள்ளும் ஒரு முஸ்லிம் அமைப்பைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் இயக்கத்தை அழித்தொழிக்க களத்தில் இறங்கியுள்ளது. அவ்வாறான கூட்டில் அமைச்சர் ரிசாத் பதியுதீனினும் இன்று இணைந்து கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் சமூக உணர்வையும், தியாகத்தையும் முஸ்லிம சமூகம் மதிப்பதுடன் அவரைப் பாராட்டவும் செய்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -