பி.எம்.எம்.ஏ.காதர்-
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை கடற்கரை நண்பர்கள் வட்ட சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு அண்மையில் (04-02-2015)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.
கடற்கரை நண்பர்கள் வட்டத்தின் தலைவரும்,ஒய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.ஆர்.அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி.ஏ.எல்எம்.முஸ்தபா, ஆசிரியர் எஸ்.எம்.எம்.அபுபக்கர்,வர்த்தகர்களான முர்சித்,வாஹித்,அன்வர் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருதமுனையில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலியின் முயற்சியினால் 80 மாணவர்களுக்கமான கற்றல் உபகரணங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மருதமுனை கடற்கரை நண்பர்கள் வட்டத்தின் சமூக மேம்பாட்டு மையம் மருதமுனையில் பல்வேறுபட்ட சமூக அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)