நேற்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைப்பதா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு வைத்திய அறிக்கையை பரிசீலித்த பின்னரே விடுக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சசி வீரவன்சவை கைது செய்து தற்போது மாலபே பகுதி தனியார் வைத்தியசாலை ஒன்றில் பொலிஸ் காவலில் வைத்துள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை பரிசீலித்த நீதவான் கிஹான் பலபிட்டிய மேற்கண்டவாறு அறிவிப்பு தெரிவித்துள்ளார்.
