குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸ் தலைமையக விசேட பிரிவினர் விமல் வீரவன்சவிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவல மேயர் புத்ததாஸ செய்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் விமல் வீரவன்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச கடவுச் சீட்டு மோசடி குற்றச்சாட்டில் நேற்று இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
