சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கு பகிடிவதையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமில்லையென சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பலாங்கொடை நகரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நட த்திய சபரமுவ மாணவர் சங்கம் மேற்கூறிய தகவலை வெளியிட்டது.
மேலும் தற்கொலைக்கு காரணமென நம்பும் காரணங்களுக்கான ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தாம் கவலையடைவதுடன் , சமரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறுவதில்லையெனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இத் தற்கொலை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள உயிரிழந்த மாணவியின் தாயார் பகிடிவதையால் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கான காரணமென தெரிவித்துள்ளார்.
எனினும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு 'பகிடிவதை' குற்றச்சாட்டை மீளப்பெறும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி தனது இறுதிக் கடிதத்தில் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எவரையும் தனது உடலை பார்வையிட அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
