எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்,யூ.கே.காலிதீன்-
இலங்கை மற்றும் சர்வதேச மக்களினதும் அபிமானத்தைப் பெற்ற மலிபன் நிறுவனம், தனது 60 வருடகால வெற்றிப் பயணத்தில் அடைந்துள்ள சாதனைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், தலைநகரத்தில் இருந்து கல்முனையில் வாழும் தனது வாடிக்கயாளர்களியும் ஆதரவாளர்களையும் கண்டு அவர்களுடன் அளவளாவி, அன்பளிப்புகள் கொடுத்து கொண்டாடி துஆ பிரார்த்தனை செய்யும் நிகழ்வு 2015-02-20ல் சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.பி.சாஹுல் ஹமீட் மரைக்காயர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு மலிபன் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவின் தலைவர் ரவி ஜெயவர்த்தனவும் தேசிய விற்பனை முகாமையாளர் கபில ஜெயவர்த்தனவும் பிராந்திய விற்பனை முகாமையாளர் தம்மிக ஜயசிங்கவும் பிரதேச விற்பனை முகாமையாளர்களான அசங்க புரே, வீரன் மங்களேஸ்வரன் , திஸ்ஸ பண்டார போன்றோருடன் பிரதேச விற்பனை மேற்பார்வை முகாமையாளர்களான ஏ.எல்.பாகிம்,ஏ.எப்.எம்.ஹாபீஸ் மற்றும் மாலக வீரக்கொடி போன்றோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மலிபன் நிறுவனத்தின் 60ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ,சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நீர்த்தாக்கியும் தண்ணீர்பம்மும் வழங்கிவைக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் பேஸ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா (ரசாதி) அவர்களால் துஆ பிரார்த்தனையும் ஏ.எம்.எம். அம்ஜத் (ரசாதி) உம்மு சலாமா பெண்கள் அரபிக் கல்லூரியின் அதிபர் அவர்களால் மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.பள்ளிவாசலின் சார்பின் நிகழ்வுகளை தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் செயலாளர் யூ.கே.காலிதீன் நெறிப்படுத்தினார்..

.jpg)
.jpg)
.jpg)