ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர முயன்ற 14 வயது மலேசிய சிறுமியொருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
அவரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மலேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தெற்கு மலேசியாவின் மவுர் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி, கெய்ரோவில் உள்ள 22 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் இணைய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமி மற்றும் அவருக்கு உதவிசெய்தோர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹிரு நியூஸ்