நிஸ்மி, அக்கரைப்பற்று-
67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மக்கள் வங்கி பல்வேறு நிகழ்வுகளை நேற்று (04.02.2015) புதன்கிழமை நடாத்தியது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுதந்திர தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வங்கியினால் விசேட வங்கிக் கணக்கிக்கான வவுச்சர்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது மக்கள் வங்கியின் அக்கரைப்பற்று முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன், ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரஜீவ விதானகே ஆகியோர் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு விசேட வங்கிக் கணக்கிக்கான வவுச்சரையும், பரிசுப் பொருட்களும் வழங்குவதையும், பெண் டாக்டர்கள் இன்று சுதந்திர தினத்தில் பிறந்த பிள்ளையொன்றை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)