நிஸ்மி, அக்கரைப்பற்று-
எமது நாட்டின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (04.02.2015) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. நிகழ்வுகளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைப்பதையும், வைத்தியர்கள்,நிருவாக உத்தியோகத்தர், தாதி உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மத்தியில் சுதந்திரத்தின் நன்மைகள் பற்றி உரையாற்றினார்.
நிஸ்மி, அக்கரைப்பற்று-
சுதந்திர இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிடடு நேற்று புதன்கிழமை (04.02.2015) அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின வைபவங்கள் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது. உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தேசியக் கொடியினை ஏற்றி வைப்பதையும், சுதந்திரத்தின் மகிமை பற்றி உத்தியோகத்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதோடு துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றது., கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, நிருவாக உத்தியோகத்தர்களான எம்.எஸ்.பாறூக், எஸ்.ரி.அன்வர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.-
.jpg)
.jpg)
.jpg)
.jpg)