தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக்குள் பிளவு!

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் 43 ஆண்டுகளில் பின்னர் முதல் தடவையாக தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாராளுமன்ற மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

1972ம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற அனைத்து சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற சம்பந்தனின் முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவு வழங்கவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்று தெரிவித்துள்ளார். 

"இது அவர்களின் தனிப்பட்ட முடிவு, இதற்கு கட்சி ஆதரவு வழங்கவில்லை, மேலும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யும் எனவும்" பிரேமச்சந்திரன் கூறினார். 

சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட காட்சிகள் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதாகவும் இது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என வர்ணனையாளர்கள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரு ஜனநாயக கட்சி மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. நான் குறிப்பாக இந்த நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களின் நலனின் அவசியத்தை உணர்ந்ததால் இந்த விழாவில் கலந்து கொண்டேன்", என சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

"நாடு இப்போது புதிய பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, நாம் அதில் ஒரு புதிய அணுகுமுறை கையாள வேண்டும். எனவே நிகழ்வில் நான் கலந்து கொண்டதை தமிழர்கள் பாராட்ட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழும் ஒரு நிலையை உறுதி செய்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -