எம்.எம்.ஜபீர்-
இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மாஹிர் பவுண்டேசன் அனுசரணையில் இற்மேற் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் ரிப்டொப் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவானது.
அணிக்கு 8 பேர் கொண்ட 7 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் இறுதி போட்டிக்கு சம்மாந்துறை ரிப்டொப் விளையாட்டுக் கழகமும், சென்னல் செவன் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய சென்னல் செவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 7 ஓவர்கள் நிறைவில் 34 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை ரிப்டொப் விளையாட்டுக் கழகம் குறித்த ஓவர்களில் மேலதிக இரண்டு ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.
சம்மாந்துறை சென்னல் சாஹிரா மகா வித்தியால மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இற்மேற் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.பௌஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாஹிர் பவுண்டேசனின் தலைவர் வை.வீ.சலீம், செயலாளர் எம்.ஐ.மஜூட், அலுவலக இணைப்பாளர் மௌலவி எம்.ஜே.எம்.இர்பான், சம்மாந்துறை சீப்கோ அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.ஏ.நாஸர், அம்பாரை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.நதார், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
