ச்மருந்துச் சந்தையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய தேசிய ஔடத சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று (05) கிடைத்துள்ளது என அரசாங்க ஊடகப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை அங்கீகாரங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - இச்சட்டமூலம் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன் சட்டமூலத்திற்கமைய மருந்துகளின் மூலப்பெயர் பொறிக்கப்படும் . வர்த்தக நாமம் தேவையென்றால் அடைப்புக்குள் குறிப்பிடப்படலாம். இதனூடாக மருந்துச்சந்தையில் மருந்தின் விலை குறையும். இதன் நன்மையும் மக்களையே சென்றடையும்.
பேராசிரியர் சேனக்க பிபிலேவின் கொள்கையே தற்போதைய காலத்திற்கும் சந்தை வாய்ப்பிற்கும் ஏற்றாற் போல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக கடுமையான முயற்சிகளின் பின்னர் அனைத்து வைத்திய சங்கம் உட்பட அனைத்து சங்கங்களின் அனுமதியுடன் இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதன்போது வைத்தியர் ஊடக மற்றும் பாராளுமன்ற அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன- வைத்தியர் பாலித்த அபேகோன் உட்பட வைத்தியர் குழாம் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
