எஸ்.எம். சன்சீர்-
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் சிரேஷ்ட தலைவர் எஸ்.எல். அறூஸ் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம் மாற்றுக் கட்சியில் இருந்து இருபர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பட்டுள்ளனர்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டுக் கூட்டமும் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களின் வருகைக்காக நேற்று (2015.02.01) பி.ப. 3.00 மணிக்கு இறக்காமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது இக்கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளையும் பொ.ஜ.மு. இறக்காமம் அமைப்பாளரும் சட்டத்தரணியும் (FFCR) அமைப்பின் தலைவருமான பாறூக் சாகிப் மற்றும் தேசிய காங்கிரஸின் இறக்காம அமைப்பாளர் நைதர் லெவ்வை சலீம் இருவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இறக்காமம் கே.எல். சமீர் அவர்களின் இல்லத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் போது இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர், இறக்காமம் பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இறக்காமம் பிரதேச ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ,சிரேஷ்ட தலைவர், முன்னிலையில் மேற்குறிப்பிட்ட இருவரும் தங்களது சுய விப்பத்தின் பெயரில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து கொண்டார்கள்.
இதன் பிறகு அவ்விருபரையும் மேற்குறிப்பிட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரமோர்கள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர் நாயம் ஹசன் அலி அவர்களிடம் அழைத்துச் சென்று அவ்விருபரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டு தங்களது கடந்த காலத்தில் இழைத்த தவறுகளுக்காக மண்ணிப்பு கோரி கட்சியில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்ட பொ.ஜ.மு. இறக்காமம் அமைப்பாளரும் சட்டத்தரணியும் (FFCR) அமைப்பின் தலைவருமான பாறூக் சாகிப் இறக்காமப் பிரதேசத்தில் மழைக்கு முழைத்த காழான்கள் போல் முழைத்துவரும் மாற்று காட்சிகளை அடியோடு அறுத்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவதற்கு ஆணிவேராக என்னால் ஆன அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர் நாயம் அவர்களிடம் உறுதி மொழி அளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)