வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடத்தப்படாதுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 11 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிகாலம் நிறைவடைந்தும் தேர்தல் நடத்தப்படாதுள்ளன.
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபை என்பவற்றுடன், மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களிலும் இவ்வாறு தேர்தல் நடத்தப்பட வேண்டி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அவர் கோரியுள்ளார்.
