எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிறந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக எதிர்வரும் காலத்தில் முன்னோக்கி நகர்த்துவதற்கு எந்த வித தடையும் இல்லை எனவும் தேவை இருப்பின் பிரதமர் பதவியை மாத்திரம் மாற்றலாம் எனவும் தெரிவிக்கின்ற குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை இருப்பதனால் பிரதமர் பதவியை ஜனாதிபதியின் விருப்பத்தின் படி தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அல்லது வேறு ஒருவருக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்க தீர்மானித்துள்ளனர்.
