ஜித்தன் ஏ.எல்.எம்-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ள மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Franceoise Clottos மற்றும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை மற்றும் சிரேஷ்ட ஆலோசகர் பிரட்மன் வீரகோன் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)