தேசிய காங்கிரஸ் தொடர்ந்தும் தனது பணியை மேற்கொள்ளும்-அமைச்சர் உதுமாலெப்பை!

சலீம் றமீஸ்-
கிழக்கில் வாழும் மூவின மக்களின் நல்லுறவுக்காகவும், அங்கு வாழும் ஏழை மக்களின் அபிவிருத்திக்காகவும் தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தனது பணியை மேற்கொள்ளும் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட பிரதிநிதிகளுடனான ஒன்று கூடல் பொத்துவில் தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களுடைய கொள்கையின் அடிப்படையில், அவர்களின் அனைத்து செயற்பாடுகளையும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் தலைமையில் தீர்க்கதரிசனமான சிந்தனையுடன் அவரது சிறந்த வழிகாட்டலுடன் கிழக்கின் மூவின மக்களுக்கும் குறிப்பாக மூவின ஏழை மக்களுக்கும் அபிவிருத்திப்பணிகளை திட்டமிட்டு சமமாக செய்து வந்துள்ளோம். 

தேசிய காங்கிரஸின் தலைமையின் வழிகாட்டலில் தொடர்ச்சியாக மக்களுக்கான பணிகளை நாம் மேற்கொள்வதுடன், கிழக்கில் வாழும் மூவின மக்களினது நல்லுறவு தொடர்ந்தும் பாதுகாப்பதற்காகவும் தேசிய காங்கிரஸ் தனது பணியை மேற்கொள்ளும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸூக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினை தவரவிடாமல் மக்களுக்காக திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை செய்துள்ளோம். 

எங்களுக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினை மக்களுக்கு பயன்படுத்திய திருப்தியும், எழை மக்களின் பிரார்த்தனையும் எங்களுக்கு போதுமானது என அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -