தன் திறமைக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தையும் அனாதை குழந்தைகளுக்கு வழங்கிய உயர்ந்த உள்ளம்

அஸ்ரப் ஏ சமத்-

ந்தியாவின் முன்னணி தொலைக்காட்சியின் சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கிலோ தங்கத்தைப்பெற்று ஈழத்தமிழர்களுக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார். வடக்கின் சிறுமி ஜெசிக்கா.

ஈழத்துச் சிறுமியான ஜெசிக்கா கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெசிக்கா மீண்டும் வயல்காட் சுற்றின் ஊடாக மக்களது பூரண ஆதரவுடன் உள்ளே நுழைந்தார். இறுதிப் போட்டிவரை சிறப்பாக தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர். இறுதிப் போட்டியிலும் ஈழத்து நினைவுகளை கொண்டுவரும் பாடல் ஒன்றினைப் பாடி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தவர் .

 ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குகளுடனும் 2ஆம் இடத்திற்கு தெரிவாகி ஒரு கிலோ தங்கத்தை பெற்றுக் கொண்டார். இதுமட்டுமல்ல தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள அனாதைச் சிறுவர் இல்லங்களுக்கும் ஒரு பகுதியை ஈழத்தில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனூடாகவும் ஜெசிக்கா மேலும் மேலும் அனைவரது மனங்களையும் நிறைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -