பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குரைக்கான தீர்வாக அக்கறைப்பற்று, கல்முனை கல்வி வலைய பிரதேசங்களில் இருந்து முதல் நியமனம் பெற்ற சுமார் 30க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பொத்துவில் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டனர்.
இதனால் பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை தற்காலிகமாக நிவர்த்தி செய்யப்பட்டது. ஆயினும் இந்நிலை நீடிக்கவில்லை.
சுமார் இருவருட சேவையின் பின் குறித்த ஆசிரியர்கள் அனைவரும் சொந்தப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இதனால் மீண்டும் ஆசிரியர் பற்றாக்குறை முன்னைய நிலையை தாண்டிச் சென்றுள்ளது.
இடமாற்றம் பெற்றுச் சென்ற பெருவாரியான ஆசிரியர்கள் கா.பொ.த உயர்தர, கா.பொ.த.சாதாரனதர, மற்றும் புலைமைப்பரிசில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களாவர். இதனால் குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை முற்று முலுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் தொடர்ச்சியாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வினை வழங்குவதை தவிர்த்து நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு சம்மந்தப்பட் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் முன்வர வேண்டும் என பொத்துவில் வாழ் கல்விச் சமூகமும், பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நிலவும் வெற்றிடத்தினை கருத்தில் கொண்டு வெளிப் பிரதேச, மாவட்ட மற்றும் மாகாணங்களில் ஆசிரியர்களாக கடமை புரியும் இப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 30 க்கு மேட்பட்ட ஆசிரியர்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் கற்பிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கையினை கல்வி அதிகாரிகளும், அரிசியல் வாதிகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
