புல்மோட்டையின் பல நிகழ்வுகளில் முஸ்லீம் காங்கிரஸ் தேசியத்தலைவர் இன்று புல்மோட்டை பிரதேசத்திற்கு கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் தேசியத்தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான அல் ஹாஜ் ரவுப் ஹக்கீம் புல்மோட்டைய சிறிய நகரம் நீர்வளங்கல் திட்டத்தினை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ தொளபீக், முன்னால் மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ,மாகாண சபை உறுப்பின்களான கௌரவ ஜே.எம்.லாஹீர், எம்.நஸீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ ஆசிக்,சல்மான் சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஎச்.எம்.எம் பாயிஸ், மாத்தளை மாவட்ட அமைப்பாளர் மௌபீத் மற்றும் உயர்பீட உறுப்பின்கள் முக்கிய பிரமுககர்களும் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் அன்வர் இந்நிகழ்வானது புல்மோட்டை வரலாற்றில் முக்கிய தடமாக பதியப்படவேண்டிய ஒன்றாகும். ஏனெனில் புல்மோட்டை கிராமம் ஆரம்பித்து இருநூறு வருடம் கடந்த நிலையில் இன்று குடி நீருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீர் விநியோக இணைப்புத்திட்டத்திற்கான கட்டடணத்தினை மானிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாகவும் இதனால் அணைத்து மக்களும் நன்மை அடைவார்கள் மேலும் சிறுநீரகப்பிர்சினைக்கான தீர்வும் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளிற்கிணங்க மாகாண விவசாய, மற்றும்
மீன்பிடி அமைச்சின் மூலம் நிறுவப்பட்ட மீனவர் பெறுமதி சேர் நிலைய கட்டிடத்தினையும், 2014ம் ஆண்டுக்கான தனது பன்முகப்படடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட புல்மோட்டை மத்திய கல்லூரி துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தினையும் முஸ்லீம் காங்கிரஸ் தேசியத்தலைவர் திறத்து வைத்ததுடன் பாடசாலையின் உள்ளக குறைபாடுகள் தொடர்பாக அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அமைச்சர் உங்களது மக்களது பிரதிநிதிகள் மூலம் வெகுவாக அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த காலங்களாக கட்சி ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட கட்கிக்காரியாலம் தொடர்பான விடயத்தினை கவனத்திலெடுத்து மாகாண சபை உறுப்பினர் அன்வர் தனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட கட்சிக்காரியாலயத்தினையும் தலைவர் ரவுப் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் ஐ.ம.சு.கட்சி பிரதேச சபை வேட்பாளர் பொருதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம். நாஸீம் புதிய கட்சிக் காரியாலயத்தில் வைத்து முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் தலைவர் ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இணைந்து கொண்டார். பின்னர் புல்மோட்டை முஹைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாயலில் இடம் பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் புல்மோட்டை வெளிமாவட்ட மீனவர்களின் வருகை தொடர்பில் எதிர் கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டதுடன் காணிப்பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஆர்.எம்.அன்வர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)