கோத்தபாயவின் அடுத்த காணிக்கொள்ளை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று பார்வையிட்டனர்.

அந்த காணியின் உரிமையாளர்களும் இவர்களுடன் சென்றிருந்தனர். அதில் ஒரு காணியில் ரஷ்யர்கள் சிலர் நிர்மாணிப்பு பணியொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது என தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய ராஜபக்ச காணியை பலவந்தமாக கைப்பற்றியதாக அங்கிருந்த யுவதி ஒருவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அந்த யுவதி நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அவரது தேசிய அடையாள அட்டையில் இந்த காணியின் விலாசமே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் பிரதிநிதிகளான சட்டத்தரணி சுனில் வட்டகல, மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, நகர சபை உறுப்பினர் ஹேமந்த வீரகோன் உட்பட ஜே.வி.பியின் பிரதிநிதிகள் இந்த காணியை பார்வையிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -