எருக்கலம்பிட்டி,புதுக்குடியிருப்பு மற்றும் பல கிராமங்களுக்கான நீர் விநியோகத்திட்டம்!

டமாகாண சபை உறுப்பினர் எச்.எம். றயீஸ் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கமைய நகர அபிவிருத்தி, நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரைக்கமைய எருக்கலம்பிட்டி மற்றும் புதுக்குடியிருப்பு கிராமங்களுக்கான நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

100 நாள் வேலைத்திட்டங்களுக்குள் உள்வாங்கி நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண சபை உறுப்பினரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான எச்.எம்.றயீஸ் அவர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்தவாரம் அமைச்சரிடம் நேரடியாக இக் கோரிக்கைகள் கையளிக்கப்ட்டன.

ஏற்கனவே எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு தனியாக நீர்விநியோகம் நீர் வழங்கள் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும் வழங்கப்படும் நீரில் அயன், மங்கனீசு கூடுதலாக காணப்படுவதால் மக்கள் நீரை பாவிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தும் மன்னார் நீர்வழங்கள் சபை பொறியியலாளரும், ஊழியர்களும் முடிந்தவரை மேற்படி பிரச்சினையை நிவர்த்தி செய்து நீர் விநியோகத்தை சிறந்த முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்காக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த குழுவொன்று இங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வழங்கப்படும் நீரை சுத்திகரித்து வழங்கும் பாரிய திட்டமொன்றை செய்வதற்கு சுமார் 60 மில்லியன் ரூபா தேவையென பரிந்துறை செய்துள்ளதோடு, நீர் சுத்திகரிப்புதிட்டம் ஒன்றையும் தயாரித்திருந்தனர்.

 இத்திட்டத்தை உடன் நடைமுறைப்படுத்தும் படியும் முன்னாள் நீர் விநியோக வடிகால்மைப்பு அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்திருந்தார்கள். இருந்தும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபப்பட வில்லை.

புதிதாக பதவியேற்றுள்ள நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் இத்திட்டத்தையும், மற்றும் தற்போது முருங்கனிலிருந்து மன்னாருக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு விஸ்தரித்து வழங்குவதற்கும், மன்னார் நகரத்தில் மணிக்கூட்டு கோபுரம் ஒன்றை அமைப்பதட்கும் தேவையான உதவிகளை பெற்றுத் தறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டத்தோடு, மன்னார் தீவுப் பகுதிக்கு வெளியால் அமைந்துள்ள குறிப்பாக முசலி, சிலாவத்துரை,ரசூல் புதுவெளி உட்பட்ட பல கிராமங்களில் நிலவும் குடி நீர் பிரச்சினைகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் நல்ல தீர்வைப் பெற்றுத் தறுமாறும் மாகாண சபை உறுப்பினர் எச்.எம். ரயீசினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மு.கா உயர்பீட உறுப்பினர் எம்.டி.எம்.தமீம் மற்றும் மாகான சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.சி.முசாதிக் ஆகியோரும் சென்றிருந்தனர்.

தகவல்: 
மாகாண சபை உறுப்பினரின் ஊடகப் பிரிவு.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -