நமது மண் விடுதலை பெற்ற நாள் சுதந்திரத்துக்கான வாழ்த்துக்கள்

சுதந்திர நாள்
போத்துக்கீசர்
ஓல்லாந்தர்
ஆங்கிலேயரென
அந்நிய ஆட்சியாளர்களால்
அவதியுற்ற அழகுத் தேசம்
மண்ணின் மன்னர்களால்
அமைதி பெற
விடுதலை பெற்ற நாள்

**************************
அநாகரிக தர்மபால
சேர் பொன்னம்பலம் இராமநாதன
டாக்கடர் ரி.பி. ஜாயா போன்ற
மூவினத் தேசமானியத் தலைவர்களின்
சுதந்திரத் தேடலின்
அகிம்சைப் போராட்டங்கள்
பெற்றுத் தந்த வரலாற்று நாள்

***************************
சுரண்டல்
ஏற்றுமதி பொருளாதாரமாய்
நம்
மண்வளமும் மனிதவளமும்
நாடு கடத்தப்பட்ட வரலாறு
நாட்டு மக்களினாலேயே
மறுதலையாய் மாற்றியெழுதிட
உதயமான நாள்

**************************
அந்நிய கொடியினாலும்
மாற்றான் படைகளினாலும்
அழகின்றி
அழங்கரிக்கப்பட்ட பொழுதுகள்
அவமானப்படுத்தப்பட்ட தேசம்
சுதந்திர நாடுயென மகுடம் சூடி
சுதந்திரக் காற்றை
சுவாசித்த நாள்

*************************
உணர்வுகளை ஊனமாக்கி
உதிரங்களை உறைய வைத்து
உயிர்களை உதிர்த்தெடுத்த
பொழுதுகளிலிருந்து சுதந்திரம் பெற்ற
ஆறாவது ஆண்டின்
சமாதான ஒளியினிலே
பிறந்திடும்
அறுபத்தேழாவது சுதந்திர நாள்


**************************
சிங்களவர், தமிழர், முஸ்லிமென்ற
இனவாதம் ஒழித்து
எங்களது உங்களது அவர்களது
தேசமென்ற தேசவாதம் நீக்கி
எல்லோரும் இலங்கையர்
ஒரே இலங்கை என்ற
உணர்வுள்ள ஜீவன்கள்
ஒன்றிணைந்து பெற்றறெடுத்த இந்த
செரண்டிப் தேசம்;
இலஞ்சம் ஊழல்
மோசடி வீண்விரையமிக்க
பத்தாண்டு கால ஆட்சியை
அதே உணர்வுகளுடன்
ஒன்றிணைந்த மக்களால்
வெற்றி கொள்ளப்பட்;ட
ஆண்டின் உதயத்தில்
மலரும்;
இந்த 67வது சுதந்திர நாள்


முனையூர் ஏ ஸமட்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -