தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் யாழ் இந்துக் கல்லூரியில் மாபெரும் இரத்ததானம்






யாழ் இந்துக்கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் யாழ் இணைப்பாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததானம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை நடைபெற்றது.

இவ் இரத்ததானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிகம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், அமைப்பாளர் லி.கஜன், கல்வி அபிவிருத்தி பிரிவின் திரு ம.பிரதீஷ் , ஊடக இணைப்பாளர் திரு சஞ்சீவன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு எஸ்.சுரேந்தர், முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு வி.சஜீவ்நாத், யாழ் மாவட்ட இணைப்பாளர்களான திரு தனுஷ், திரு சிவா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இரத்ததானம் வழங்கியவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வழங்கப்பட்டதுடன், யாழ் நகர் எங்கும் இரத்ததான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் அனுசரணையில் இரத்ததான நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட கோவில்குளம் இளைஞர் கழகம் பெயர் மாற்றப்பட்டு இன்று தமிழ் தேசிய இளைஞர் கழகமாக இலங்கையின் பல பாகங்களில் தமது சமூக, கலை, கலாசார, கல்வி அபிவிருத்திகளில் ஈடுபடும் இக்கழகம் யாழ் மண்ணில் தானங்களில் சிறந்த தானமான இரத்ததானம் மூலம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -