வாசகர்களுக்கு ஒரு சுவாரயம் ஒன்றினை கொடுக்க வேண்டும் என்ற என்னத்தில், நிகழ்வுகளில் நிகழ்ந்த, யாரும் கவணிக்காத விடயங்களை தொகுத்து வழங்கலாம் என்ற என்னம் பல மாதங்களுக்கு முன் மனதில் எழுந்த போதும் சில காரணங்களுக்காக தடைபோட்டுக்கொண்டு வந்தேன். இருந்த போதும் எழுதுவோன் என்ற உத்வேகம் என்னில் இங்கு எழுதுகின்றேன். இப்படியான தகவல்களை வாசகராகிய உங்களுக்கு தரவேண்டும் என்று எத்தனித்துள்ளேன்.
கடந்த 03ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்குராப்பண நிகழ்வு, பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் அதிபர் ஹகீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
அக்கட்சியின் தலைவர், செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தலைவரை ஊர்வலமாக மேடையை நோக்கி எடுத்துச்சென்று ஒரு கலக்கு கலக்குவோம் என திட்டம் தீ்ட்டிக்கொண்டிருந்தனர் ஆதரவாலர்கள். பொத்துவில் மண்னை முதல் தடவையாக தரிசித்த தலைவரிடம் தொண்டர்கள் தங்கள் திட்டத்தை எடுத்தியம்பிய போது, இல்லை இல்லை ஊர்வலம் வேண்டாம், நீங்கள் செல்லுங்கள், நான் எனது வண்டியில் வருகின்றேன் என்று சொல்லி தொண்டர்களின் திட்டத்தில் இடியை தூக்கிப் போட்டார் அக்கட்சியின் தலைவர்.
கட்சிக்கு பெரிய வரவேற்பு இருக்கின்றது என்பதை காட்டிக்கொள்வதற்காக வரவழைக்கப்பட்ட நபர்கள் ஒருபுரம் இருக்க, வெளியில் நின்டவர்களை பார்த்து உள்ளே வாருங்கள், உள்ளே வாருங்கள். வந்து உக்காருங்கள் என தாழ்மையுடன் உள்ளே தல்லப்பட்டார்கள் அங்கிருந்தவர்களால். செய்தி சேகரிப்பிற்கு சென்ற நானும் அதில் ஒருத்தன் என்பதுதான் இங்கு கிலேமக்சாகும்.
தலைமையுரையுடன் கூட்டம் தொடங்க, தலைமை உரையிலும் சுவாரஷ்யம் இருக்கும் என்பதை கலந்து கொண்டவர்கள் எதிர்பார்து இருந்திருக்க மாட்டார்கள், தலைமை உரையை ஆக்கரோசமாக உரைத்த அதிபர் ஹகீம் அவர்கள் போட்ட ஆட்டம் அனைவரையும் மிகவும் கவர்ந்ததாக இருந்திருக்கும்.
தனது உரையினை முடிந்த்த செயலாளர் வை.எல்.எஸ் ஹமீத் தனது பேச்சினை முடித்து விட்டு கதிரையில் உற்காந்வுடனே அதிபர் ஹகீம் அவர்களை நோக்கி குடிப்பதற்கு ஒன்னும் இலையா என கேற்க, அதிபரின் பணிப்புரைக்கு அமைய அவருக்கு டீ வழங்கப்பட்டது.
பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தனக்கு வந்த தொலை பேசி அழைப்புகளை ஆன்சர் பன்னிபேசிக்கொண்டிருந்த அக்கட்சியின் தலைவர், தொலைபேசி அழைப்பு வராத சந்தர்ப்ங்களில் தூங்கிகொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
செயலாளருக்கு பின்னால் தனது உரையை நிகழ்த்திய தலைவர் செயலாளரால் வீற்றிருந்தவர்களின் பெயர்களை பெரிய கடித உறையில் எழுதி கொடுக்க அதன் படியே பெயர்களை வாசிக்க தொடங்கினார். மதிய நேரத்தில் கூல் ரின்ங்ஸ் ஒன்னு கிடைக்கும் என்னு கூட்டத்தற்கு ஒதுங்கிய பார்வையாலர்களுக்கு பச்சை தண்ணீராவது வழங்கப்படாமை வியப்பை ஊட்டியது.
