இன்றுப் பிறந்த சுதந்திர தினம்.... அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்


புதியதொரு தேசம் 
புலர்கிறது சுதந்திரமாய் 
எம்நாடு இனிவெல்லும் 
இமயமங் கடந்த வெற்றிகளை 

பிடித்திருந்த பீடைகளை 
M3 என்னும் நாசினி கொண்டு 
அழிக்கப்பட்டது  - இனிமேல் 
விளைபவைகள் பொன்களாகட்டும் 

மூச்சுத்திணறி மூழ்கிய நாடு 
தட்டுத் தடுமாறி கரை தேடிய நாடு 
காரிருளில் ஒளிதேடிய நாடு - இன்று 
சுதந்திரச் சுவாசம் பெருமூச்சாய் விடுகிறது 

நாடு ஈன்ற மனங்களெல்லாம் 
ஒரு சேர மகிழ்கின்ற காலமாய் 
இன்றய சுதந்திரம் இனிதே 
மகிழ்வுடன் மிளிர்கின்றது 

அச்சம் தவிர்த்து 
எச்சங்களையும் தீர்த்திட 
உலவுகின்ற உள்ளங்களுக்கு 
நிவாரணம் கிடைத்திடட்டும் 

ஆங்காங்கு அன்னையர்களின் 
அழுகுரல்கள் ஈன்ற குழந்தை தேடி 
அகம் கனத்தவர்கின்  உள்ளங்களும் 
அழுகிறது அவர்களுக்காய் 

எம் தேசத்து உறவுகளில் 
யார் அழுதாலும் - சுதந்திரமில்லை 
அனைவர் உள்ளங்குளிரும் 
சுதந்திரமல்லவா எம் தேவை 

இன்றுப் பிறந்த சுதந்திர தினம் 
என்றும் எம் தேசத்தவனின் 
நல்வாழ்வுக்காய் அமைந்து 
குறையற்ற இலங்கையை 
குலங்கள் சிறக்க அமைத்திடட்டும் 
அனைவருக்கும் சுதந்திரதின
ல்வாழ்த்துள் 

கவிஞர் பாலமுனை ஹாஸிம்
கட்டாரில் இருந்து.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -